விக்ரம் பிரபு நடிக்கும் லவ் மேரேஜ் படத்தில் நடிகர் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமாகி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தவர். அதைத்தொடர்ந்து இவர் இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தார். கடந்தாண்டில் இவரது நடிப்பில் ரெய்டு எனும் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமான விக்ரம் பிரபு, அனுஷ்காவுடன் இணைந்து காட்டி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் சில படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார் விக்ரம் பிரபு. அந்த வகையில் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள லவ் மேரேஜ்- Love Marriage எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை சண்முகப்பிரியன் இயக்க ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபர் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படமானது குடும்ப பொழுதுபோக்கு பின்னணியில் உருவாகி வருகிறது. இப்படமானது 2025 கோடை விடுமுறையில் வெளியாக இருக்கும் நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் விக்ரம் பிரபு உடன் இணைந்து சுஷ்மிதா பட், ரமேஷ் திலக், மீனாட்சி, அருள்தாஸ், முருகானந்தம் மற்றும் பலர் நடித்துள்ளனர். அடுத்தது இந்த படத்தில் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே விக்ரம், பிரபு சத்யராஜ் ஆகிய இருவரும் இணைந்து சிகரம் தொடு திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.