Homeசெய்திகள்சினிமா'தங்கலான்' இசை வெளியீட்டு விழாவில் எமோஷனலாக பேசிய நடிகர் விக்ரம்!

‘தங்கலான்’ இசை வெளியீட்டு விழாவில் எமோஷனலாக பேசிய நடிகர் விக்ரம்!

-

விக்ரம் நடிப்பில் தற்போது வீர தீர சூரன் திரைப்படம் உருவாகி வருகிறது. அதே சமயம் துருவ நட்சத்திரம் திரைப்படமும் உருவாகி ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. 'தங்கலான்' இசை வெளியீட்டு விழாவில் எமோஷனலாக பேசிய நடிகர் விக்ரம்!இதற்கிடையில் நடிகர் விக்ரம், பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. அதற்காக முழு வீச்சில் தயாராகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 5) சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித், விக்ரம் மாளவிகா மோகனன், பார்வதி, ஜி.வி. பிரகாஷ் போன்ற பட குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் விக்ரம், “நான் 8ஆம் வகுப்பு படிக்கும் போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதன் பிறகு காலேஜ் படிக்கும் போது நடிக்க வேண்டும் என மிகுந்த ஆர்வம் இருந்தது. ஐஐடியில் பிளாக் காமெடி எனும் நாடகத்தில் நடித்து அதற்காக சிறந்த நடிகர் விருது பெற்றேன். அன்றைக்கே விபத்தில் காலை உடைத்துக் கொண்டேன். என்னுடைய காலையே வெட்டி எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். மூன்று வருடம் மருத்துவமனையில் படுக்கையிலேயே இருந்தேன்.

கிட்டத்தட்ட 23 ஆபரேஷன் செய்தார்கள். எங்க அம்மா டாக்டரிடம் கேட்டபோது அவன் நடக்கவே மாட்டான் என்று சொன்னார்கள். ஆனால் நான் கட்டாயம் நடப்பேன் என்று என் அம்மாவிடம் சொன்னேன். நடிக்க வேண்டும், ஒரே ஒரு சீனில் வந்தால் கூட போதும் என்ற வெறியில் இருந்தேன். அதன்பிறகு சினிமாவில் வந்த பிறகும் படம் எதுவும் ஓடவில்லை. அப்போதும் நிறைய பேர் சொன்னார்கள் சினிமா எல்லாம் வேண்டாம் டா விட்டுடு என்று சொன்னார்கள். ஆனால் என்னால முடியும் என்று என் கனவை நோக்கி ஓடினேன். அன்றைக்கு நான் விட்டிருந்தால் இன்று உங்கள் முன் நின்று இப்படி பேசி இருக்க மாட்டேன்” என்று எமோஷனலாக பேசினார்.

MUST READ