Homeசெய்திகள்சினிமாவிக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' ..... இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது?

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ ….. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது?

-

- Advertisement -
kadalkanni

நடிகர் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' ..... இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது?இதைத் தொடர்ந்து விக்ரம், சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும், சித்தா உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான அருண்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். விக்ரமின் 62 வது படமான இந்தப் படத்திற்கு வீர தீர சூரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, சித்திக் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விக்ரம் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படமானது எமோஷனல் கலந்த ஆக்சன் படமாக உருவாகி வருகிறது.விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' ..... இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது?ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார். அதே சமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு மதுரையில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. பின்னர் தென்காசியில் சில காட்சிகள் படமாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' ..... இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது?அதன்படி வீர தீர சூரன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு 2024 ஜூன் 20 அன்று தொடங்கும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை படத்தின் தயாரிப்பாளரும் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ