spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇணையத்தில் பரவும் அந்தரங்க வீடியோ.... சைபர் கிரைமில் புகார் அளித்த விக்ரம் பட நடிகை!

இணையத்தில் பரவும் அந்தரங்க வீடியோ…. சைபர் கிரைமில் புகார் அளித்த விக்ரம் பட நடிகை!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் விக்ரம் நடித்த ஜெமினி, பிரசாந்த் நடித்த வின்னர், அஜித் நடித்த வில்லன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கிரண். இணையத்தில் பரவும் அந்தரங்க வீடியோ.... சைபர் கிரைமில் புகார் அளித்த விக்ரம் பட நடிகை!மேலும் இவர் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் கவனம் செலுத்தினார். அதன் பிறகு ஒரு காலத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார் கிரண். இணையத்தில் பரவும் அந்தரங்க வீடியோ.... சைபர் கிரைமில் புகார் அளித்த விக்ரம் பட நடிகை!அடுத்தது இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தான் சமூக வலைதளங்களில் சிலர், நடிகை கிரணின் ஆபாச வீடியோவை வெளியிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து நடிகை கிரண் இந்த வீடியோவானது தனது டிஜிட்டல் மாற்றிய வீடியோ என்றும் தன்னுடைய தனி உரிமைக்கு மாறானது என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் அவர், “சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன். உண்மையான வீடியோவோ, பொய்யான வீடியோவோ எதுவாக இருந்தாலும் அந்த மாதிரியான வீடியோவை யாரும் பகிர வேண்டாம். இது சட்டப்படி குற்றம்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

MUST READ