spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிக்ரமின் ரீல் மகள் நடிக்கும் 'மேஜிக்'...... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

விக்ரமின் ரீல் மகள் நடிக்கும் ‘மேஜிக்’…… ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

சாரா அர்ஜுன் நடிக்கும் மேஜிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

விக்ரமின் ரீல் மகள் நடிக்கும் 'மேஜிக்'...... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!கடந்த 2011 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் தெய்வத்திருமகள் திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விக்ரமின் மகளாக சாரா அர்ஜுன் நடித்திருந்தார். இவர் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதைத்தொடர்ந்து நாசர் நடிப்பில் வெளியான சைவம் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் சாரா அர்ஜுன்.விக்ரமின் ரீல் மகள் நடிக்கும் 'மேஜிக்'...... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

we-r-hiring

மேலும் சாரா அர்ஜுன் கடந்த ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிறு வயது ஐஸ்வர்யா ராயாக நடித்திருந்தார்.

தற்போது சாரா அர்ஜுன், மேஜிக் எனும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கௌதம் தின்னனுரி இயக்குகிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட், ஸ்ரீஹரா ஸ்டுடியோஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. விக்ரமின் ரீல் மகள் நடிக்கும் 'மேஜிக்'...... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!அனிருத் இதற்கு இசையமைக்கிறார். கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் இந்த படம் 2024 கோடையில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ