spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபுஷ்பா 2 படத்திற்கு போட்டியாக களமிறங்கும் விக்ரமின் 'தங்கலான்'!

புஷ்பா 2 படத்திற்கு போட்டியாக களமிறங்கும் விக்ரமின் ‘தங்கலான்’!

-

- Advertisement -

நடிகர் விக்ரம் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புஷ்பா 2 படத்திற்கு போட்டியாக களமிறங்கும் விக்ரமின் 'தங்கலான்'!ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷின் இசையிலும் இந்த படம் உருவாகி உள்ளது. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் தனது ஒவ்வொரு படங்களிலும் முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தில் தோன்றுவார். அதற்காக கடினமாக உழைப்பார். புஷ்பா 2 படத்திற்கு போட்டியாக களமிறங்கும் விக்ரமின் 'தங்கலான்'!தங்கலான் படத்திலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார் விக்ரம். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதன் டீசரும் வெளியாகி கவனம் பெற்றது. அடுத்ததாக படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். புஷ்பா 2 படத்திற்கு போட்டியாக களமிறங்கும் விக்ரமின் 'தங்கலான்'!ஏனென்றால் ஏற்கனவே ஏப்ரலில் ரிலீஸாக இருந்த இந்த படம் ஒரு சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் தங்கலான் திரைப்படமானது 2024 ஆகஸ்ட் 15 இல் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாக இருப்பதால் தங்கலான் திரைப்படமும் அதை நாளில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ