விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, அபிநயா, செல்வராகவன், சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் டீசர் இரண்டு மாதங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
அதைத்தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில் விஷால், மார்க் ஆண்டனி படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.