விஷால் நடிப்பில் உருவாக உள்ள துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து விஷால், பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் 2024 ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து நடிகர் விஷால் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை தொடங்கும் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் துப்பறிவாளன் 2 படம் தொடர்பான பணிக்காக லண்டன் சென்றுள்ளார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதற்கிடையில் நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில், துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக மறைமுகமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த துப்பறிவாளன் படத்தை மிஸ்கின் இயக்கியிருந்தார். ஆனால் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை நடிகர் விஷால் தான் இயக்கி நடிக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே துப்பறிவாளன் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகமும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதே சமயம் துப்பறிவாளன் 2 படத்தில் விஷால் உடன் இணைந்து பிரசன்னா, கௌதமி, ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.