நடிகர் விஷ்ணு விஷால், கடந்த 2009 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். அந்த வகையில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. மேலும் விஷ்ணு விஷால் மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து பல படங்களில் நடிக்கவும் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் திருநாவுக்கரசு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி வெளியாக இருக்கிறது. அதே சமயம் விஷ்ணு விஷால் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் சூரி குறித்து பேசி இருக்கிறார்.
அதில் விஷ்ணு விஷாலிடம் சூரி கதாநாயகனாக நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஷ்ணு விஷால், “எனக்கும் சூரிக்கும் சில மனக்கசப்புகள் இருந்தது. ஆனால் அது இப்போது இல்லை. நாங்கள் மீண்டும் நண்பர்களாகி விட்டோம். சமீபத்தில் வெளியான சூரியின் கருடன் படத்தின் டீசரை பார்த்து சூரியை தொடர்பு கொண்டு நீங்க ஹீரோவா நடிச்சா அப்ப நாங்க என்ன பண்றது என்று ஜாலியாக பேசினேன்” என்று விஷ்ணு விஷால் பேசியுள்ளார்.
வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் , ஜீவா உள்ளிட்ட படங்களில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து சூரியும் நடித்திருந்தார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் சூரி விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தையின் மீது நில மோசடி புகார் அளித்ததாக செய்திகள் வெளியாகி வந்தது. குறிப்பிடத்தக்கது