நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கிராமத்து நாயகனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார்.
அதைத்தொடர்ந்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, எஃப்ஐஆர், ராட்சசன், கட்டா குஸ்தி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதில் தற்போது ‘கட்டா குஸ்தி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய வெற்றி படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளார். அதன்படி அவர், “ராட்சசன், இன்று நேற்று நாளை, எஃப்.ஐ.ஆர், முண்டாசுப்பட்டி ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். இந்த தொடர் படங்களுக்கு எல்லாம் அடித்தளமாக இருப்பது கட்டா குஸ்தி படம் தான். ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெற்றி பெற்றால் நான் மற்ற தொடர் படங்களை தொடங்குவேன்.
கட்டா குஸ்தி 2 படத்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் நகைச்சுவை காட்சிகள் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் நன்றாக ஒர்க் அவுட் ஆகும். அது சரியான ஃபேமிலி என்டர்டெயினர் படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -


