கட்டா குஸ்தி 2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்யன்’ திரைப்படம் 2025 அக்டோபர் 31 அன்று திரைக்கு வர இருக்கிறது. இதை தவிர ‘ஓர் மாம்பழ சீசனில்’, ‘இரண்டு வானம்’ ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் உருவாகும் கட்டா குஸ்தி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். காமெடி கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
Time for a rematch 👊#SecondRound starts tomorrow at 5PM!@VVStudioz @VelsFilmIntl pic.twitter.com/JUlwNtGy9T
— Vels Film International (@VelsFilmIntl) August 31, 2025

இந்நிலையில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. அதன்படி இன்று (செப்டம்பர் 1) மாலை 5 மணி அளவில் புதிய அறிவிப்பு ப்ரோமோ வெளியாகும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த அறிவிப்பானது கட்டா குஸ்தி 2 படம் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.