நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் ஆர்யன் படத்தின் படப்பிடிப்பை நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தொடங்கியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக வலம் வருகிறார். அதே சமயம் இவர் பல படங்களை தயாரித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் எனும் திரைப்படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இன்னும் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ள விஷ்ணு விஷால் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆர்யன் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் நடத்தப்பட்டு வந்தது.
Back on #Aaryan set and got the sweetest welcome that made my day. ! Overwhelmed❤️
Can’t wait for u guys to see what #Aaryan means to me…@adamworx @VVStudioz @DCompanyOffl @DuraiKv @ShraddhaSrinath @selvaraghavan @SamCSmusic #VV pic.twitter.com/MdAXrzRU2B— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) September 24, 2024
பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் ஆர்யன் திரைப்படத்தினை விஷ்ணு விஷால் தயாரிக்க பிரவீன் இந்த படத்தினை இயக்கி வருகிறார். சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விஷ்ணு சுபாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.