- Advertisement -
சிரஞ்சீவி நடிக்கும் விஷ்வாம்பரா திரைப்படத்தில் மூன்று நாயகிகள் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. சிரஞ்சீவி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் போலா சங்கர். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பதால் தனது அடுத்த படத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் நடிகர் சிரஞ்சீவி. சிரஞ்சீவி நடிக்கும் 156 வது படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை பிம்பிசாரா படத்தின் இயக்குனர் வசிஷ்டா இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது.


இப்படத்திற்கு விஷ்வாம்பரா என்று அண்மையில் தலைப்பு வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து, படத்தின் நாயகி குறித்து அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி வந்தன. பிப்ரவரி மாதம், படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் நடிகை த்ரிஷா படப்பிடிப்பில் பங்கேற்ற காணொலியையும் படக்குழு பகிர்ந்துள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட த்ரிஷாவுக்கு நடிகர் சிரஞ்சீவி பூங்கொத்து வரவேற்றார்.



