Homeசெய்திகள்சினிமாரசிகனாக இருந்த நான் குடும்பத்தில் ஒருவனாக மாறினேன்..... 'வேட்டையன்' குறித்து ரக்சன் வெளியிட்ட பதிவு!

ரசிகனாக இருந்த நான் குடும்பத்தில் ஒருவனாக மாறினேன்….. ‘வேட்டையன்’ குறித்து ரக்சன் வெளியிட்ட பதிவு!

-

வேட்டையன் படம் குறித்து ரக்சன் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகனாக இருந்த நான் குடும்பத்தில் ஒருவனாக மாறினேன்..... 'வேட்டையன்' குறித்து ரக்சன் வெளியிட்ட பதிவு!விஜே ரக்சன், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர். அதே சமயம் இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு நண்பனாக நடித்து பெயர் பெற்றார். அடுத்தது மறக்கமா நெஞ்சம் எனும் திரைப்படத்தின் கதாநாயகனாகவும் களமிறங்கி பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளை பெற்றார்.ரசிகனாக இருந்த நான் குடும்பத்தில் ஒருவனாக மாறினேன்..... 'வேட்டையன்' குறித்து ரக்சன் வெளியிட்ட பதிவு! அடுத்தது வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரக்சன். இந்த படம் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. போலி என்கவுண்டர் தொடர்பான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 240 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.ரசிகனாக இருந்த நான் குடும்பத்தில் ஒருவனாக மாறினேன்..... 'வேட்டையன்' குறித்து ரக்சன் வெளியிட்ட பதிவு! இந்நிலையில் ரக்சன், வேட்டையன் திரைப்படத்தில் நடித்ததற்காக ரஜினி, டிஜே ஞானவேல், மஞ்சு வாரியர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஒரு ரசிகனாக இருந்த நான் இப்போது குடும்பத்தில் ஒருவனாக மாறி இருக்கிறேன். நீங்கள் காட்டிய அன்பிற்கும் ஆதரவிற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்”என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்திலிருந்து சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ