வார் 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். அதேசமயம் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவர்கள் இருவரும் இணைந்து வார் 2 திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வார் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு வார் 2 திரைப்படம் உருவாகி இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அயன் முகர்ஜி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரிட்டாம் இசையமைக்க பெஞ்சமின் ஜாஸ்பர் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படமானது 2025 ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இந்நிலையில் இன்று (மே 20) ஜூனியர் என்டிஆர்-ன் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் ஆக்சன் காட்சிகள் காட்டப்படுகின்றன. அதிலும் ஹிருத்திக் ரோஷன் – ஜூனியர் என்டிஆர் மோதும் காட்சியும் காட்டப்படுகிறது. இந்த டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
