தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தான் இவருடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் சமீபத்தில் செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்திடம், தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசியதாகவும், தனுஷுடன் நடிக்க அவருடன் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணுமாறு அழுத்தம் கொடுத்து தப்பு தப்பாக மெசேஜ் பண்ணதாகவும் அந்த சீரியல் நடிகையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தனுஷின் மேனேஜர் பெயரில் மர்ம நபர் ஒருவர் பொய் கணக்கின் மூலம் பல பெண்களிடம், நடிக்க வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தகவல் கசிந்திருந்தது.
அதன் பின்னர் இந்த தகவல் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் கவனத்திற்கு செல்ல, தன்னுடைய பெயரில் இவ்வாறு மோசடி நடப்பதை அறிந்து, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறினார் ஸ்ரேயாஸ். தற்போது இந்த விவகாரத்தையும், மான்யா ஆனந்த் சொன்ன விவகாரத்தையும் வைத்து பார்க்கும் போது அந்த மர்ம நபர்தான் தனுஷ் பெயரை வைத்தும், தனுஷின் மேனேஜர் பெயரை வைத்தும் மோசடியில் ஈடுபட்டு வருகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக தனுஷ் மற்றும் அவருடைய மேனேஜர் தரப்பில் வேறு ஏதேனும் விளக்கம் கொடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -


