நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து சூர்யா தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இவர் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. ஆனால் வாடிவாசல் படத்திற்கு முன்பாக நடிகர் சூர்யா புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளாராம். அந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே இப்படத்தினை யாரும் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் ஆர் ஜே பாலாஜி தான் சூர்யா 45 திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இவர்களின் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த படத்தினை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்க போவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் சூர்யா 45 படத்தின் கதையானது ஆரம்பத்தில் விஜய்க்காக எழுதப்பட்டதாம். அதாவது தளபதி 69 படம் தான் தனது கடைசி படம் என்று விஜய் அறிவித்திருந்த நிலையில் விஜயிடம் பலரும் கதை சொல்லி அவரது கடைசி திரைப்படத்தை இயக்க விரும்பினார்கள். அதில் ஆர் ஜே பாலாஜியும் ஒருவர். அப்படி ஆர்ஜே பாலாஜி, விஜயிடம் சொன்ன கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும் கடைசி படமாக இருக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் விஜய். எனவே அந்த கதையில் சில மாற்றங்களை செய்து மாசாணி அம்மன் என்ற பெயரில் திரிஷாவை வைத்து படம் இயக்க திட்டமிட்டு இருந்தாராம் ஆர் ஜே பாலாஜி.
இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் ஆர் ஜே பாலாஜி, நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்து விஜயிடம் சொன்ன அதே கதையை சொல்லியிருக்கிறார். அந்த கதையை கேட்ட சூர்யா உடனே ஓகே சொல்லிவிட்டதாகவும் அதையும் சில மாற்றங்களை செய்ய சொல்லி இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையினால் தற்போது இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். சூர்யாவின் 44 வது திரைப்படம் முடிந்த பிறகு சூர்யா 45வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -