மதராஸி படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயனின் 23 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் மதராஸி. இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து வித்ராந்த், வித்யூத் ஜம்வால், டான்சிங் ரோஸ் சபீர், பிஜு மேனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சுதீப் எலாமன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்த அடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் 2025 செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தில் பிஜு மேனன் கதாபாத்திரத்தில் முதலில் மோகன்லால் தான் நடிக்க இருந்தாராம். கால்ஷீட் பிரச்சனை காரணமாக மோகன்லால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது. அடுத்தது குட் நைட் பட இயக்குனர் விநாயகக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால் நடிக்க உள்ளார் என்பதும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.