Homeசெய்திகள்சினிமாPS 1 - குந்தவை வேடம் உருவான விதம்

PS 1 – குந்தவை வேடம் உருவான விதம்

-

PS 1 – குந்தவை வேடம் உருவான விதம்

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றிருந்த த்ரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் உருவான விதம் குறித்து படக்குழு காணொலி வெளியிட்டுள்ளது.

இரண்டு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 2 பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வனில், ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை

கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

புதிய வீடியோ வெளியிட்டது படக்குழு

முதல் பாகத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே, பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றிருந்த த்ரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் உருவான விதம் குறித்து படக்குழு காணொலி வெளியிட்டுள்ளது. மேலும், இரண்டாம் பாகத்தில் முதல் பாடல் விரைவில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.

MUST READ