ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். இந்தப் படத்தில் விக்ரம் மற்றும் விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மொய்தின் பாய் என்னும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார்.
லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமானின் இசை அமைத்துள்ளார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் லால் சலாம் படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் படத்தின் டீசரும் அதை தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில் லால் சலாம் திரைப்படம் 2024 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படத்தில் டிஜிட்டல் உரிமை இன்னும் விற்கப்படாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் ஜனவரி 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா ஶ்ரீ சாய்ராம் கல்லூரியில் டிசம்பர் 21 இல் நடைபெறும் என கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் வெளிவந்திருந்தன. தற்போது இசை வெளியீட்டு விழாவை ஜனவரி முதல் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.