spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஜனநாயகன்' படத்தின் அடுத்த அறிவிப்பு என்ன?

‘ஜனநாயகன்’ படத்தின் அடுத்த அறிவிப்பு என்ன?

-

- Advertisement -

ஜனநாயகன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.'ஜனநாயகன்' படத்தின் அடுத்த அறிவிப்பு என்ன?

விஜயின் 69 ஆவது படமாக உருவாகும் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதன் இசையமைப்பாளராகவும், சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர். இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு மற்றும் பலர் நடித்துள்ளனர். 'ஜனநாயகன்' படத்தின் அடுத்த அறிவிப்பு என்ன?ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், முன்னோட்ட வீடியோவும் வெளியானது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ‘தளபதி கச்சேரி’ பாடலும் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் என்னவாக இருக்கும்? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 'ஜனநாயகன்' படத்தின் அடுத்த அறிவிப்பு என்ன?அதன்படி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே செய்திகள் கசிந்திருந்தது. எனவே இது குறித்து அறிவிப்பு இந்த வாரம் படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ