spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகண்டிஷன் போட்ட அமீர்கான்.... லோகேஷின் சூப்பர் ஹீரோ படம் ட்ராப் ஆனதுக்கு இதுதான் காரணமா?

கண்டிஷன் போட்ட அமீர்கான்…. லோகேஷின் சூப்பர் ஹீரோ படம் ட்ராப் ஆனதுக்கு இதுதான் காரணமா?

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவருடைய இயக்கத்தில் அண்மையில் ‘கூலி’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கண்டிஷன் போட்ட அமீர்கான்.... லோகேஷின் சூப்பர் ஹீரோ படம் ட்ராப் ஆனதுக்கு இதுதான் காரணமா?அதாவது மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தப் படத்தில் சில லாஜிக் மிஸ்டேக்குகள் இருப்பதனால் இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸை பெரிய அளவில் கவரவில்லை. இது தவிர இந்த படத்தில் கேமியோ ரோலில் வந்த அமீர்கானின் கேரக்டர் ஒர்க் அவுட் ஆகவில்லை. பலரும் அமீர்கானின் கேரக்டரை ட்ரோல் செய்து வருகின்றனர். இதற்கிடையில் லோகேஷ் – அமீர்கான் கூட்டணியில் புதிய சூப்பர் ஹீரோ படம் உருவாகப் போவதாகவும் அந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் சமீப காலமாக இந்த ப்ராஜெக்ட் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது இது குறித்த கூடுதல் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது லோகேஷ் கனகராஜ், ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கதையில் சில மாற்றங்களை செய்யக்கூடியவர். கண்டிஷன் போட்ட அமீர்கான்.... லோகேஷின் சூப்பர் ஹீரோ படம் ட்ராப் ஆனதுக்கு இதுதான் காரணமா?இதன் காரணமாக அமீர்கான், முழுமையான ஸ்கிரிப்டை முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும் எனவும் அதன் பிறகு சில மாதங்கள் கழித்து படப்பிடிப்பை தொடங்கலாம் எனவும் கூறினாராம். ஆனால் லோகேஷ் கனகரஜுக்கு அதில் விருப்பம் இல்லையாம். இதன் காரணமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, சூப்பர் ஹீரோ படம் தற்போதைக்கு கைவிடப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. எனவே லோகேஷ் அடுத்தபடியாக ‘கைதி 2’ அல்லது ரஜினி- கமல் இணைய உள்ள படத்தில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ