கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியிருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் கமல், சிம்பு தவிர திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். நாயகன் படத்திற்கு பிறகு கமல், மணிரத்தினம் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி வருகின்ற ஜூன் மாதம் 5ஆம் தேதி இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, ராஜஸ்தானில் ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்த தக்கர்கள் வழிப்பறி, கொள்ளையடிப்பது போன்ற தொழிலை செய்து வந்திருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் அவர்களை கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் ஆங்கிலேய கலெக்டர் ஒருவரை அந்த கும்பல் கொன்றுவிட, அதன் பின்னர்தான் அவர்களை அழிக்க தொடங்குகிறார்கள். இது சம்பந்தமாக தான் தக் லைஃப் படத்தின் கதை இருக்கும் என சொல்லப்படுகிறது.
அதேபோல் நடிகர் சிம்பு, கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி வருகின்றன. இது தவிர நடிகர் சிம்பு கமல்ஹாசனுக்கு மகனாக நடித்திருக்கிறாரா? அல்லது மருமகனாக நடித்திருக்கிறாரா? என்பது போன்ற பல தகவல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகமாக்கி வருகிறது.
- Advertisement -