Homeசெய்திகள்சினிமா'வாடிவாசல்' குறித்து வெற்றிமாறன் - சூர்யா முடிவு என்ன?..... தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!

‘வாடிவாசல்’ குறித்து வெற்றிமாறன் – சூர்யா முடிவு என்ன?….. தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!

-

- Advertisement -

பிரபல இயக்குனர் வெற்றிமாறன், சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இது சம்பந்தமான அறிவிப்புகளும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே வெளியானது. 'வாடிவாசல்' குறித்து வெற்றிமாறன் - சூர்யா முடிவு என்ன?..... தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!இருப்பினும் வெற்றிமாறன் விடுதலை முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு, விடுதலை இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருவதால் வாடிவாசல் படம் தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. இதற்கிடையில் வாடிவாசல் படத்திற்காக நடிகர் சூர்யா காளையை அடக்கும் பயிற்சி எடுத்திருந்தார். 'வாடிவாசல்' குறித்து வெற்றிமாறன் - சூர்யா முடிவு என்ன?..... தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!எனவே ரசிகர்களும் வாடிவாசல் திரைப்படம் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தான் சமீபத்தில் வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விளக்குவதாகவும் நடிகர் சூரி அல்லது தனுஷ் இதில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் பல செய்திகள் பரவி வந்தது. 'வாடிவாசல்' குறித்து வெற்றிமாறன் - சூர்யா முடிவு என்ன?..... தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!இது தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்தில் நடந்த பேட்டியில், “வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வெற்றிமாறன் இந்த படத்தை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார். சூர்யாவும் வெற்றிமாறனிடம் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தன்னை வந்து பார்க்கும்படி கூறியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் பரவி வருவது வெறும் வதந்திகள் தான். வெற்றிமாறனும் அல்லது சூர்யாவோ அல்லது தயாரிப்பாளர் தாணுவோ கூறாமல் இதை உண்மை என்று நான் நம்ப மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ