Homeசெய்திகள்சினிமாவெளிநாட்டில் நடைபெறும் 'தக் லைஃப்' ஆடியோ லான்ச்.... எந்த தேதியில் தெரியுமா?

வெளிநாட்டில் நடைபெறும் ‘தக் லைஃப்’ ஆடியோ லான்ச்…. எந்த தேதியில் தெரியுமா?

-

- Advertisement -

தக் லைஃப் படத்தின் ஆடியோ லான்ச் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.வெளிநாட்டில் நடைபெறும் 'தக் லைஃப்' ஆடியோ லான்ச்.... எந்த தேதியில் தெரியுமா?

கமல்ஹாசனின் 234 வது படமாக உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படம் 2025 ஜூன் மாதம் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருக்கிறார். நாயகன் படத்திற்கு பிறகு கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது. ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். வெளிநாட்டில் நடைபெறும் 'தக் லைஃப்' ஆடியோ லான்ச்.... எந்த தேதியில் தெரியுமா?இப்படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த படத்தில் இருந்து ஜிங்குச்சா எனும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.வெளிநாட்டில் நடைபெறும் 'தக் லைஃப்' ஆடியோ லான்ச்.... எந்த தேதியில் தெரியுமா? இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி 2025 மே மாதம் 16ஆம் தேதி தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகவும், இந்த விழாவை ஆஸ்திரேலியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ