spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மூன்றாவதாக இயக்கி இருந்த படம் தான் லால் சலாம். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்திருந்தார்.லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ரஜினிக்கு மனைவியாக நிரோஷா நடித்திருந்தார். மேலும் தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த பிப்ரவரி 9ம் தேதி வெளியானது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மத நல்லிணக்கம் என்ற கான்செப்ட்டை இந்த படத்தில் வைத்து, சொல்ல வந்ததை நெத்தி பொட்டில் அடித்தது போல் சொல்லி இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?அதன்படி வசூல் ரீதியாகவும் இந்த படம் தோல்வி படமாகவே அமைந்தது. இந்நிலையில் இப்படம் வருகின்ற மார்ச் 8ம் தேதி நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அறிவிப்பு இதுவரை
வெளியாகவில்லை.

MUST READ