spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஏகே 64' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

‘ஏகே 64’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

-

- Advertisement -

ஏகே 64 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.'ஏகே 64' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதற்கு முன்பாக குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று அஜித்தின் கேரியரிலேயே அதிக வசூலை வாரி குவித்தது. மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித்தின் 64வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாக ஹிண்ட் கொடுக்கப்பட்டிருந்தது. 'ஏகே 64' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?எனவே ஏகே 64 படமானது ‘குட் பேட் அக்லி 2’ படமாக உருவாகுமா? அல்லது வேறொரு புதிய படமாக உருவாகுமா? என்பது போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கப் போகிறது என்றும் சொல்லப்படுகிறது. இது தவிர நடிகர் அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில், தன்னுடைய அடுத்த படம் 2025 நவம்பர் மாதத்தில் தொடங்கும் எனவும் 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படம் ரிலீஸ் ஆகும் எனவும் அப்டேட் கொடுத்திருந்தார். 'ஏகே 64' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?இந்நிலையில் ஏகே 64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் இரண்டாவது வாரத்திற்கு முன்பு வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ