Homeசெய்திகள்சினிமா'கட்டா குஸ்தி 2' ரிலீஸ் எப்போது?.... விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட்!

‘கட்டா குஸ்தி 2’ ரிலீஸ் எப்போது?…. விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

கட்டா குஸ்தி 2 படத்தின் ரிலீஸ் குறித்து விஷ்ணு விஷால் அப்டேட் கொடுத்துள்ளார்.'கட்டா குஸ்தி 2' ரிலீஸ் எப்போது?.... விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷால் விஷால் தற்போது ‘ஆர்யன்’ படத்தை கைவசம் வைத்துள்ளார். கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் விஷ்ணு விஷால் நடிப்பில் இரண்டு வானம், கட்டா குஸ்தி 2 ஆகிய படங்களும் உருவாகி வருகிறது. அதில் ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.'கட்டா குஸ்தி 2' ரிலீஸ் எப்போது?.... விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட்! ஏனென்றால் கடந்த 2022 ஆம் ஆண்டு செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியான ‘கட்டா குஸ்தி’ படத்தின் முதல் பாகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. எனவே ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படமும் முதல் பாகத்தை போல் குத்துச்சண்டையை மையமாக வைத்து நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இதனை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனமும், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 'கட்டா குஸ்தி 2' ரிலீஸ் எப்போது?.... விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட்!இந்நிலையில் படம் குறித்த சில தகவல்களை நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் நடந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “கட்டா குஸ்தி 2 படத்தின் 28 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடையும். மேலும் இந்த படத்தை அடுத்த ஆண்டு மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இந்த படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, காளி வெங்கட், முனீஸ்காந்த், கருணாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ