குட் பேட் அக்லி படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
அஜித்தின் 63வது படமாக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதனாலையே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ஏனென்றால் ஏற்கனவே வெளியான டீசரில் அஜித்தின் வின்டேஜ் படங்களின் குறியீடுகளை வைத்து அனைவரையும் மிரள வைத்திருந்தார் ஆதிக். அதைத்தொடர்ந்து OG சம்பவம் பாடல் ரசிகர்களை கொண்டாட வைத்தது. மேலும் God bless u பாடலும் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.
எனவே அடுத்தது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டை எதிர்நோக்கி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி வருகின்ற ஏப்ரல் 3ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேங்ஸ்டர் கலந்த கதைக்களத்தில் அப்பா – மகன் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


