Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசனின் அடுத்த பட ஷூட்டிங் எப்போது?

கமல்ஹாசனின் அடுத்த பட ஷூட்டிங் எப்போது?

-

- Advertisement -

கமல்ஹாசனின் அடுத்த பட ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.கமல்ஹாசனின் அடுத்த பட ஷூட்டிங் எப்போது?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வரும் கமல்ஹாசன் கடைசியாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சரிவை சந்தித்தது. இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இது தவிர இந்தியன் 3 படத்தையும் கைவசம் வைத்துள்ளார் கமல். கமல்ஹாசனின் அடுத்த பட ஷூட்டிங் எப்போது?அதேசமயம் மீண்டும் இவர், மணிரத்தினம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர் அன்பு – அறிவு மாஸ்டர்கள் இயக்கத்தில் தனது 237 வது (KH 237) திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. கமல்ஹாசனின் அடுத்த பட ஷூட்டிங் எப்போது?அதன் பிறகு இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஜூன் 12ஆம் தேதி அன்று தொடங்கும் எனவும் இப்படப்பிடிப்பினை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ