ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யாவின் ப்ரோ கோட் பட ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரவி மோகன் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தவிர ‘பராசக்தி’ படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார். அதே சமயம் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் இவர், யோகி பாபுவை வைத்து ‘ஆன் ஆர்டினரி மேன்’ எனும் திரைப்படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் ரவி, ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி புதிய படங்களை தயாரிக்கிறார். அதில் முதல் படமாக ப்ரோ கோட் எனும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்க உள்ளார். இதில் ரவி, எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன், கௌரி பிரியா, ஸ்ரத்தா ஶ்ரீநாத், மாளவிகா மனோஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் செம வைரலானதோடு மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் உலா வருகிறது. தற்போது கிடைத்த தகவலின் படி, இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அடுத்தடுத்த அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.


