நடிகர் சூரி, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
அதைத்தொடர்ந்து இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், தேசிங்கு ராஜா என பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் ஹீரோவாக களமிறங்கினார் சூரி. இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைய அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்த வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கருடன் படத்திற்கு பிறகு கொட்டுக்காளி திரைப்படமும் வருகின்ற ஆகஸ்ட் 23 அன்று வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சூரி, விலங்கு வெப் தொடரை இயக்கி பிரபலமான பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார். இதனை கருடன் படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. சமீபத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் நடிகர் சூரி படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
– It’s a family movie that doesn’t lack that relationship in the entire family
– This story seems to resonate with everyone
– The shooting of this film starts from December#KottukkaaliFromAug23 #Kottukkaali #Viduthalai2pic.twitter.com/j6ZAKy0P2P— Movie Tamil (@MovieTamil4) August 19, 2024
அவர் கூறியதாவது, “அடுத்ததாக குடும்ப படத்தில் நடிக்க இருக்கிறேன். முழு குடும்பத்திலும் அந்த ஒரு உறவு கண்டிப்பாக இருக்கும். மேலும் இந்த கதை அனைவருடனும் பொருந்தி போகும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாக கூடுதல் தகவல் வெளியாகி உள்ளது.


