தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் பாடகர் என பன்முகத் திறமைகளை கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடிக்க வருகிறார். அந்த வகையில் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் தனுஷ் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இப்படம் அரசியல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்புகள் ஏறத்தாழம் நிறைவடைந்த நிலையில் படமானது 2025 ஜூன் 20ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், கிளிம்ப்ஸ் வீடியோவும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வரும் இந்த படத்தை டீசர் குறித்த அப்டேட் தற்போது கிடைத்திருக்கிறது. அதன்படி வருகின்ற மே 25ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.