Homeசெய்திகள்சினிமா'குபேரா' படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?

‘குபேரா’ படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

குபேரா படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.'குபேரா' படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?

நடிகர் தனுஷின் 51 வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் குபேரா. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படமானது அரசியல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இதில் தனுஷ், தேவா என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படப்பிடிப்புகள் நிறைவடைந்து
படத்திலிருந்து டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது.'குபேரா' படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? அதே சமயம் இந்த படத்தில் இருந்து முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. அதன்படி அடுத்த வார இறுதிக்குள் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படமானது ஜூன் 20ஆம் தேதி திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ