Homeசெய்திகள்சினிமா'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தை இயக்கப் போவது இவர்தான்.... வெளியான புதிய தகவல்!

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கப் போவது இவர்தான்…. வெளியான புதிய தகவல்!

-

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் இயக்குனர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தை இயக்கப் போவது இவர்தான்.... வெளியான புதிய தகவல்!

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். அவருடன் இணைந்து ஆர்.ஜே பாலாஜி, மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி திரிஷா நடிப்பில் மாசாணி அம்மன் எனும் திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதேசமயம் நயன்தாராவின் நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவாகப் போவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி இந்த மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கப் போகிறார். 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தை இயக்கப் போவது இவர்தான்.... வெளியான புதிய தகவல்!ஆனால் பட குழு வெளியிட்ட அறிவிப்பில் படத்தை யார் இயக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்? என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்விகளுக்கு வந்தனர். இந்நிலையில் இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிரபல நடிகரும் இயக்குனருமான சுந்தர். சி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். எனவே விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ