விஜய் ஆண்டனி நடிக்கும் சக்தித் திருமகன் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் வள்ளி மயில், ககன மார்கன் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் சக்தித் திருமகன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை விஜய் ஆண்டனி தயாரித்து, நடித்து, இசையமைக்கிறார். இந்த படம் விஜய் ஆண்டனியின் 25வது படமாகும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிடப்பட்டது. மேலும் இப்படமானது 2025 கோடையில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தில் நடிகை த்ருப்தி கதாநாயகியாக நடிக்கிறார் என புதிய தகவல் தெரிவிக்கின்றன. இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் வெளியான அருவி, வாழ் ஆகிய இரண்டு படங்களிலுமே கதாநாயகியின் கதாபாத்திரம் மிகவும் வலுவாக அமைக்கப்பட்டிருக்கும். எனவே அது போலவே சக்தித் திருமகன் படத்திலும் த்ருப்தியின் கதாபாத்திரமும் வலுவாக அமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் மற்ற அப்டேட்டுகளும் வெளியாகும் என நம்பப்படுகிறது.