Homeசெய்திகள்சினிமா'சூர்யா 44' படத்தில் வில்லனாக நடிக்கப் போவது இந்த ஹீரோவா?

‘சூர்யா 44’ படத்தில் வில்லனாக நடிக்கப் போவது இந்த ஹீரோவா?

-

நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 'சூர்யா 44' படத்தில் வில்லனாக நடிக்கப் போவது இந்த ஹீரோவா?அதைத்தொடர்ந்து புறநானூறு திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். ஆனால் இந்த படம் ஒரு சில காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. அதேசமயம் கைவிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது படத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யா 44 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 2ஆம் தேதி அந்தமானில் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனமும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும் படக்குழுவினர் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளதாகவும், சபிக் முகமது அலி படத்தொகுப்பாளராக இணைந்துள்ளதாகவும், கெச்சா காம்பெக்தீ சண்டை பயிற்சியாளராக இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'சூர்யா 44' படத்தில் வில்லனாக நடிக்கப் போவது இந்த ஹீரோவா?எனவே இனிவரும் நாட்களில் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் உறியடி, பைட் கிளப் , எலக்சன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருந்த விஜய்குமார் தான் சூர்யா 44 படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற புதிய அப்டேட் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ