spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவாக்களிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்... செய்தியாளர் கேள்விக்கு ஜோதிகா விளக்கம்...

வாக்களிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்… செய்தியாளர் கேள்விக்கு ஜோதிகா விளக்கம்…

-

- Advertisement -
நடப்பாண்டில் வாக்களிக்காமல் இருப்பது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, வாக்களிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று நடிகை ஜோதிகா விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கத் தொடங்கினார். தற்போது அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தொடக்கத்தில் தமிழில் மட்டும் நடித்து வந்த ஜோதிகா, தற்போது, மலையாளம், இந்தி என பல மொழிப் படங்களில் ரவுண்டு கட்டி கலக்கி வருகிறார். அவரது நடிப்பில் இறுதியாக மலையாளத்தில் காதல் தி கோர் என்ற திரைப்படம் வெளியானது. இதைத் தொடர்ந்து இந்திக்கு சென்ற அவர் மாதவன், அஜய் தேவ்கனுடன் இணைந்து சைத்தான் படத்தில் நடித்தார்.

we-r-hiring
தற்போது, பிரபல பார்வைற்ற மாற்றுத்திறனாளி தொழில் அதிபரான ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை துஷார் இயக்குகிறார். இந்தி மொழியில் உருவாகி வரும் இத்திரைப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகை ஜோதிகாவும் கலந்து கொண்டார். அப்போது, சமூக கருத்துகள் குறித்து பேசும் நீங்கள் ஏன் இந்தாண்டு வாக்களிக்கச் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதில் அளித்த ஜோதிகா, தான் எப்போதும் வாக்களித்து விடுவேன், தவிர்க்க முடியாத காரணங்களால் வெளிநாடுகளில் இருக்கும்போது என்னால் வாக்களிக்க முடிவதில்லை என்றார். மேலும், வாக்களிப்பதும், வாக்களிக்காமல் செல்வதும் ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்தானே என்று விளக்கமும் அளித்திருக்கிறார்.

MUST READ