பொங்கல் விருந்தாக விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் பட விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் வம்சி,
வாரிசு ஒரு படம் அல்ல. நடிகர் விஜய், தில்ராஜு ஆகியோர் என் மீது வைத்த நம்பிக்கையே. இப்படம் தொடங்கிய நாளிலிருந்து இது ஒரு தெலுங்கு இயக்குனர் படம் என்றே சொல்லி வந்தனர்.

இது என் மனதை மிகவும் பாதித்தது. வாரிசு பக்கா தமிழ் படம். நான் தமிழ் இயக்குனரா, தெலுங்கு இயக்குனரா என்பதை தாண்டி முதலில் ஒரு மனிதன் என்பதை உணருங்கள்.
இதுபோன்ற, பிரிவினைகளை ஒதுக்கி வைத்து விட்டு, இப்படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் வாரிசு படத்திற்காக அவர்களின் இதயத்தில் எனக்கு ஒரு இடம் கொடுத்துள்ளனர்.
இந்த படத்தில் சரத்குமார் கேரக்டர் மற்றும் நடிப்பை பார்த்த எனது தந்தையார் உடனே என்னை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு என்று இயக்குனர் வம்சி பேசினார்.