Homeசெய்திகள்சினிமா“ரத்னகுமார் ஏன் அப்படி பண்ணாருன்னு தெரியல”… லியோ படம் குறித்து பேசிய விஜய் சேதுபதி!

“ரத்னகுமார் ஏன் அப்படி பண்ணாருன்னு தெரியல”… லியோ படம் குறித்து பேசிய விஜய் சேதுபதி!

-

- Advertisement -

‘லியோ’ படத்தில் தான் நடிக்கவில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

we-r-hiring

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். கோலிவுட்டின் பேவரைட் ஜோடியான இவர்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஜோடி சேருகின்றனர்.

மேலும் இந்தப் படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத் , மிஷ்கின் , பிரியா ஆனந்த் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் துணை கதை ஆசிரியரான ரத்னகுமார் சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி விக்ரம் படத்தில் அணிந்திருந்த கண்ணாடியை வைத்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதை வைத்து பலர் சமூகவலைத்தளங்களில் விஜய் சேதுபதி லியோ படத்தில் நடிக்கிறார் என கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.

தற்போது இதுகுறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

“நான் லியோ படத்தில் நடிக்கவில்லை. ஏன் ரத்ன குமார் அந்த கண்ணாடியை வைத்து ட்விட்டரில் பதிவிட்டார் என எனக்கு தெரியவில்லை. இச்செய்தியை பல பெரிய ஊடகங்களிலும் கூட பதிவிட்டு வருவதால் மக்களும் இதனை நம்புகின்றனர். அவர்கள் நினைத்தால் எங்களை எளிதாக அணுகி இது பற்றி உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ