காணொலி வாயிலாக ஆஜரானதைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்தது செங்கல்பட்டு நீதிமன்றம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யிடம் விவாகரத்து கோரி தொடரப்பட்ட வழக்கை, அவரது மனைவி சங்கீதா திடீரென வாபஸ் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அந்த வழக்கைச் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.


முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. காணொலி வாயிலாக ஆஜர், இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முதலமைச்சரின் மனைவி சங்கீதா காணொலிக் காட்சி (Video Conferencing) வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது, முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி தான் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகச் சங்கீதா நீதிபதியிடம் தெரிவித்தார்.
வழக்கு முடித்து வைப்பு:
சங்கீதா தனது விவாகரத்து மனுவை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, இந்த வழக்கை முடித்து வைப்பதாகச் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. மனைவியின் இந்த அதிரடி முடிவால், கடந்த சில நாட்களாக நிலவி வந்த விவாகரத்து தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
