spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎதிர்பார்ப்பிற்கு ஆப்பு வைத்த 'கூலி'.... கை கொடுக்குமா 'ஜெயிலர் 2'?

எதிர்பார்ப்பிற்கு ஆப்பு வைத்த ‘கூலி’…. கை கொடுக்குமா ‘ஜெயிலர் 2’?

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படமாக உருவாகியிருந்த கூலி திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. எதிர்பார்ப்பிற்கு ஆப்பு வைத்த 'கூலி'.... கை கொடுக்குமா 'ஜெயிலர் 2'?லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கிறது. தலைவரை தரிசனம் செய்ய தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. அதன்படி நடிகர் ரஜினி படம் முழுவதையும் தோளில் தாங்கியுள்ளார். நாகார்ஜுனா வில்லத்தனத்தில் மிரட்ட, சௌபின் சாகிர் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.எதிர்பார்ப்பிற்கு ஆப்பு வைத்த 'கூலி'.... கை கொடுக்குமா 'ஜெயிலர் 2'? மேலும் ஸ்ருதிஹாசன் தனது உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுகிறார். இது தவிர கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவும் அனிருத்தின் இசையும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளனர். இவ்வாறு இந்த படத்தில் பல ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தாலும் மற்ற கதாபாத்திரங்களும், திரைக்கதையும் வலுவாக அமைக்கப்பட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். அதாவது மிகுந்த எதிர்பார்ப்புகள் இல்லாமல் பார்த்தால் இந்த படம் ஓகே ரகம்தான். ஆனாலும் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். எதிர்பார்ப்பிற்கு ஆப்பு வைத்த 'கூலி'.... கை கொடுக்குமா 'ஜெயிலர் 2'?இதற்கிடையில் தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி வசூல் என்பது எட்டாக்கனியாக இருந்து வரும் நிலையில் கூலி திரைப்படம் நிச்சயம் ஆயிரம் கோடி ரூபாயை அள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் ஆயிரம் கோடியை நெருங்குமா? என்பது சந்தேகம்தான். எனவே ரசிகர்கள் அனைவரும் அடுத்ததாக ரஜினியின் ஜெயிலர் 2 படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே ஜெயிலர் திரைப்படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்ததால் ஜெயிலர் 2 திரைப்படம் கோலிவுட்டின் ஆயிரம் கோடி படமாக அமையும் என்று நம்புவதாக ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ