நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருகிறார். இவர் தொடர்ந்து பல படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார். அந்த வகையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், குபேரா, இட்லி கடை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் தான் நடிகர் தனுஷ், ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் தான் ஜெயிலர். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்த நிலையில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்து வருகிறது. அடுத்தது ஜெயிலர் படத்தில் ஏகப்பட்ட கேமியோ ரோல்கள் இடம்பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
அதன்படி ஜெயிலர் 2 படத்திலும் கேமியோ ரோல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகர் மோகன்லால் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் நடிகர் தனுஷ், ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கப் போகிறாராம். நெல்சனும் தனுஷை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டம் போட்டுள்ளாராம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் தான் தனுஷ். ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. எனவே தனுஷின் ஆசை ஜெயிலர் 2 திரைப்படத்தில் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
- Advertisement -