spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசொன்ன தேதியில் வெளியாகுமா 'காந்தாரா 2'?.... படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

சொன்ன தேதியில் வெளியாகுமா ‘காந்தாரா 2’?…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

-

- Advertisement -

காந்தாரா 2 படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.சொன்ன தேதியில் வெளியாகுமா 'காந்தாரா 2'?.... படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டியின் இயக்கத்திலும், நடிப்பிலும் காந்தாரா திரைப்படம் வெளியானது. 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. தெய்வ நம்பிக்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் தொழில்நுட்ப காரணங்களாலும், பின்னணி இசையாலும் இந்திய அளவில் பிரபலமானது. எனவே இதன் அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி காந்தாரா சாப்டர் 1 என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் கிபி 301 முதல் 400 காலகட்டத்தில் நடப்பது போன்று எடுக்கப்படுகிறது. அதன்படி பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் இப்படமானது 2025 அக்டோபர் 2ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் மொழியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

we-r-hiring

ஆனால் படப்பிடிப்பின் போது இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த காரணத்தால் இப்படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்படும் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இந்நிலையில் இது குறித்து படக்குழு, “தாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருக்கிறது. காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும். வதந்திகளை நம்ப வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். இந்த தகவல் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளது.

MUST READ