கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம் சொன்னபடி ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கார்த்தியின் நடிப்பில் தற்போது மார்ஷல், சர்தார் 2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதற்கிடையில் இவர் வா வாத்தியார் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் கார்த்தி போலீஸ் கெட்டப்பில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து க்ரித்தி ஷெட்டி, ராஜ்கிரண், ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சத்யராஜ் வில்லனாக நடித்துள்ளார். நலன் குமாரசாமி இயக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதே சமயம் சமீபத்தில் இதன் பேட்ச் ஒர்க் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும், அடுத்தடுத்த போஸ்டர்களும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. அடுத்தது இந்த படம் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடையாததால், படமானது வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும் படக்குழுவும் தெலுங்கு போஸ்டரை வெளியிடும்போது அதில் டிசம்பர் ரிலீஸ் என்று தான் குறிப்பிட்டு இருந்தது. ஆகையினால் இதன்மூலம் இந்த படம் டிசம்பரில் வெளியாகும், புதிய தேதியை படக்குழு விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வரையிலும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதே சமயம் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் பல படங்களின் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ப்ரொமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வா வாத்தியார் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியதற்கான எந்த தகவலும் இல்லாத நிலையில் இந்த படம் சொன்னபடி டிசம்பரில் வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ரசிகர்களும் குழப்பமடைந்துள்ளனர்.


