Homeசெய்திகள்சினிமாதிட்டமிட்டபடி கமலுடன் இணைந்து நடிப்பாரா சிம்பு?.....'தக் லைஃப்' படத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட்!

திட்டமிட்டபடி கமலுடன் இணைந்து நடிப்பாரா சிம்பு?…..’தக் லைஃப்’ படத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட்!

-

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.திட்டமிட்டபடி கமலுடன் இணைந்து நடிப்பாரா சிம்பு?.....'தக் லைஃப்' படத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட்! அதன்படி கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் சில தினங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு செர்பியா போன்ற பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான், ஏற்கனவே பல படங்களில் கமிட்டாகி இருப்பதால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக தக் லைஃப் படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளிவந்தது. அதைத்தொடர்ந்து தற்போது துல்கர் சல்மானுக்கு பதிலாக நடிகர் சிம்பு களமிறங்க போவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டிலேயே மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தில் சிம்பு நடிக்கப் போகிறார் என்று தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த நிலையில் சிம்பு தரப்பில் இது மறுக்கப்பட்டது. திட்டமிட்டபடி கமலுடன் இணைந்து நடிப்பாரா சிம்பு?.....'தக் லைஃப்' படத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட்!அதன்படி சிம்புவுக்கு பதிலாக தான் துல்கர் சல்மான் இணைந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் துல்கர் சல்மான் விலகிய காரணத்தால் மீண்டும் சிம்பு , தக் லைஃப் படத்தில் நடிக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ