spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் நீக்கமா?

ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் நீக்கமா?

-

- Advertisement -

புதிய இயக்குநருடன் படபிடிப்பு தொடங்குமா?

அஜித்தின் 62 வது படத்தை இயக்க இருந்தவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இந்த அறிவிப்பு கடந்த மே மாதமே வெளியிடப்பட்டது.

we-r-hiring

அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கசிந்துள்ளது.

ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிலும் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்திற்கும், லைக்கா நிறுவனத்திற்கும் சரி வராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த வாய்ப்பை விக்னேஷ்க்கு பெற்றுத் தந்தவர் அவரின் மனைவியான நயன்தாரா தான்.

அவரின் சமரச பேச்சு கூட எடுபடாமல் போய்விட்டதாக தகவல் தெரிகிறது.

இதனால் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் செம மூட் அவுட்டில் இருக்கிறார்கள்.

இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் குமார், லைக்கா நிறுவனத்தின் தலைவர் ஆகிய மூவரும் லண்டனில் தான் இருக்கின்றனர்.

அங்கு நடந்த காரசார வாக்குவாதத்தில் தான் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

விக்னேஷ் சிவனுக்கு பதிலாக வேறு ஒரு இயக்குநரை வைத்து  இப்படத்தை இயக்க போவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் பற்றி லைக்கா நிறுவனமோ அல்லது விக்னேஷ் சிவனிடமிருந்தோ எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இது பற்றிய தகவல் வெகு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த அறிவிப்புக்காக ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் காத்துக் கொண்டிருக்கிறது.

லைக்கா நிறுவனத்திடம் கமிட் ஆகி படப்பிடிப்பு தொடங்கும் போது நீக்கப்படுவது விக்னேஷ் இவனுக்கு இது புதிதல்ல, ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்பு விக்னேஷ் சிவனின் கதை அவர்களின் பட்ஜெட்டுக்கு ஒத்து வராது என்று சொல்லி விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார் என்பது அவைரும் அறிந்த ஒன்று.

MUST READ