ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
அதே சமயம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் ‘லால் சலாம்’ திரைப்படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து ரஜினி தனது 170 ஆவது படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாக உள்ளது. மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இதன் பிறகு தலைவர் 171 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இதை மல்டி ஸ்டார்ஸ் படமாக தயாரிக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் வரிசையில் இருக்கிறார்கள். அந்த வகையில் தலைவர் 171 படத்தில் கேமியோ ரோலில் கேஜிஎப் நடிகர் யாஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.