- Advertisement -
சலார் படத்தில் பிரபாஸூடன் இணையும் யஷ்
பிரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படத்தில் யஷ், முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
கே.ஜி.எப். படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ‘பாகுபலி’ பிரபலம் பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற வேடத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சலார் திரைப்படத்தில் கேஜிஎஃப் பட புகழ் யஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் யஷின் கதாப்பாத்திரம் 7 நிமிடம் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவலால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது.