spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅதிரடியாக வெளியான 'யாஷ் 19' பட டைட்டில்!

அதிரடியாக வெளியான ‘யாஷ் 19’ பட டைட்டில்!

-

- Advertisement -

அதிரடியாக வெளியான யாஷ் 19 பட டைட்டில்!கே ஜி எஃப் சாப்டர் 1, சாப்டர் 2 ஆகிய படங்களின் மூலம் தனது ஸ்டார் அந்தஸ்தை பெற்றவர் நடிகர் யாஷ்.பிரசாந்த் நீல் இயக்கியிருந்த இந்த படம் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவில் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரும்பிய பக்கமெல்லாம் ராக்கி பாய் ராஜ்ஜியம் தான்.

இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் யாஷ் தனது 19 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான நளதமயந்தி படத்தில் நடித்திருந்த கீது மோகன் தாஸ் இயக்க இருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகையும் ஆவார். கே ஜி எஃப் படத்திற்கு பிறகு யாஷ் நடிக்கும் இந்த புதிய படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த படத்தில் யாஷுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் டைட்டில் வெளியாகி உள்ளது.

we-r-hiring

அதன்படி யாஷ் 19 படத்திற்கு TOXIC (டாக்ஸிக்)
என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சீட்டு கட்டுகளுக்கு மத்தியில் யாஷின் உருவம் தோன்றுவது போல இந்த டைட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சூதாட்டம் தொடர்பான படமாக இருக்குமோ என நினைக்கத் தோன்றுகிறது. மேலும் டைட்டிலுக்கு கீழ் A FAIRY TALE FOR GROWN UP என்ற கேப்ஷ்னும் இடம் பெற்றுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி உலக அளவில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ